 |
|
தூரப் பார்வை மட்டும் கிட்டப் பார்வை குறைபாடு உள்ள மனிதர்கள்
உலகில் பலர் இருக்கிறார்கள். இவர்களில் பலர் மூக்கு கண்ணாடியைப் பாவிக்கிறார்கள்.
மேலும் சிலர் லேசர் அறுவை சிகிச்சை மூலம் தமது கண்களை திருத்திக்கொள்கிறார்கள்.
ஆனால் நவீன காலத்தில் கலர் கலராக வெளிவரும் கான்டக் லென்ஸ் என்பது ஒரு பேஷனாக
மாறிவிட்டது. இந்த செயற்கை கண் வில்லைகள்(காண்டக் லென்ஸ்) கண்ணுக்கு மிகவும்
ஆபத்தானவை என்று மருத்துவர்கள் பலகாலம் எச்சரித்துவருகிறார்கள். ஆனால் எவரும்
அதனைக் கணக்கில் எடுப்பதாக இல்லை. கண் பார்வையை நிவர்த்திசெய்யவும், மேலும் தமது
கண்களை கவர்ச்சியாக காட்டவும் பலர் இந்த காண்டாக் லென்ஸைப் பயன்பத்தியே
தீருகின்றனர். ஆனால் நடந்த விபரீதத்தை நீங்கள் அறிந்துகொள்ளவும் வேண்டும் !
பிரித்தானியாவைச் சேர்ந்த ஜாக்குலின் ஸ்டோன் என்னும் 42 வயது தாயார், 2
வாரங்களாக ஒரு காண்டக் லென்ஸைப் பாவித்துள்ளார். அதில் உள்ள ஒருவகையான பஃங்கஸ்
கிருமி தனது வேலையைக் காட்டிவிட்டது. இக் கிருமி கண்ணில் பரவி, அப்படியே கண்ணின்
கருமணியை, தாக்கி அதனை உண்டுவிட்டது. கண்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில்,
ஜாக்குலின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த பஃங்கஸைக் கட்டுப்படுத்த
முன்னரே அது படுவேகமாக வளர்ந்து அவரது ஒரு கண்ணை சூறையாடிவிட்டது. இந்த
பரிதாபத்துக்குரிய தாய், தற்போது ஒரு கண்களை இழந்து தவிக்கிறார். யாரும் இனிமேல்
காண்டாக் லென்ஸ் பாவிக்கவேண்டாம் என இவர் இரக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இருப்பினும், காண்டாக் லென்ஸை சுத்தம் செய்து மிகவும் கவனமாக பாவித்தால்,
கண்களுக்கு கேடு விளையாது என்று மருத்துவர்கள் தெரிவித்துவருகிறார்கள்.
viyapu thanks
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக