puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 18 பிப்ரவரி, 2013

வேலைநிறுத்த அறிவிப்பை வாபஸ் பெற தொழிற்சங்கங்கள் மறுப்பு!




எதிர்வரும் பிப். 20 மற்றும் 21 திகதிகளில் நாடு முழுவதிலும் உள்ள தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பை வெளியிட்டு உள்ளன.

விலைவாசி உயர்வு, தொழில் நிறுவனப் பங்குகளை தனியார் மயமாக்கல் உள்ளிட்ட உத்தரவுகளை திரும்பப் பெறவேண்டும் என்கிற கோரிக்கையை வைத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், இவ்வேலை நிறுத்தம், ஏ ஐ.டி.யூ.சி.யின் இந்திய பொது செயலாளர் குருதாஸ் தாஸ் குப்தா தலைமையில் நாடு முழுவதும் நடக்க உள்ளது. எனினும் இந்த வேலை நிறுத்த அறிவிப்பை திரும்ப பெறவேண்டும் என்று கோரியுள்ள பிரதமர், நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தால், பாரிய பெரும் பொருளாதார இழப்பு நேரிடும். பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாவார்கள் எனவும் எச்சரித்துள்ளார். மேலும், 'தொழில் சங்க பிரதிநிதிகள் வைத்துள்ள கோரிக்கை பரிசீலனையில் உள்ளது. விரைவில் பரிசீலனை முடிந்து, இவர்களின் கோரிக்கை நிறைவேற்றி வைக்கப்படும்' என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த மத்திய அமைச்சர்கள் நால்வரை, பேச்சுவார்த்தைக்கு அனுப்பப்பட்டிருந்தனர். எனினும் பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்படவில்லை என்று தெரியவருகிறது. இது குறித்து பேசியுள்ள குருதாஸ் தாஸ் குப்தா, வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற முடியாது என்றும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாத மத்திய அரசு எங்கள் கோரிக்கையை ஏற்று பரிசீலிப்பதோடு நல்ல முடிவையும் கூறும் வரை போராட்டத்தை நிறுத்தும் அறிவிப்பை வெளியிட மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

4tamilmedia thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக