- Friday, 01 February 2013 12:53

ஆஷிஸ் நந்தியை கைது செய்யக்கூடாது என நான்கு மாநில காவல்துறையினருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவில் எழுத்தாளர் ஆஷிஸ் நந்தி தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு எதிராக கருத்து கூறியதாகவும், உடனடியாக அவரை கைது செய்ய வேண்டுமெனவும் மாயாவாதி உட்பட பல அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியிருந்தனர். எனினும் தான் கைது செய்யப்பட கூடாது எனக்கோரி உச்சநீதிமன்றத்தை நாடினார் ஆஷிஸ் நந்தி.
இதையடுத்து ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீகார், சட்டிஸ்கார் நான்கு மாநில காவல்துறையினருக்கும் ஆஷிஸ் நந்தியை கைது செய்ய வேண்டாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதுடன், ஆஷிஸ் நந்தியும் இனிமேல் இவ்வாறு கருத்துக்கூறுவதை தவிர்த்து கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளது.
ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவில் கலந்து கொண்டு பேசிய ஆஷிஸ் நந்தி, ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் அதிகளவு ஊழல் கறை படிந்தவர்கள் என்று தெரிவித்திருந்தார். இதற்கு மாயாவதி உட்பட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜஸ்தான் அரசு அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் இலக்கியத் திருவிழாவில் இருந்து அவரை வெளியேற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
4tamilmedia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக