
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று தனலட்சுமி காணாமல் போனார். அன்றிலிருந்து மாணவர் மணிகண்டனையும் காணவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்த தனலட்சுமி ஏற்கனவே திருமணமானவர் என்றும், அவருக்கு 2 குழந்தைகள் இருப்பதும் தன்னுடன் ஏற்பட்ட காதலால் அவர்களை விட்டு விட்டு தன்னுடன் வந்ததாகவும், தற்போது மாணவன் மணிகண்டனுடன் ஏற்பட்ட காதலால் தன்னை விட்டு விட்டு மாணவனுடன் சென்று விட்டதாகவும் சிலேந்திரன் தெரிவித்த தகவல் மாணவனின் பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து தென்காசி போலீசில் மணிகண்டனின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவன் மணிகண்டன் மற்றும் தனலட்சுமியை போலீசார் தேனி மற்றும் மதுரை மாவட்ட பகுதியில் தேடி வருகின்றனர்.
tamilkurinji thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக