puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

துலே: போலீஸ் தலையீடே கலவரம் உருவாக காரணம் – உண்மை கண்டறியும் குழு அறிக்கை!



Dhule
புதுடெல்லி:மஹராஷ்ட்ரா மாநிலம் துலேயில் கடந்தவாரம் நடந்த கலவரம் உருவாக காரணம் வகுப்புவாத வெறி தலைக்கேறிய போலீஸின் தலையீடாகும் என்று உண்மை கண்டறியும் குழு அறிக்கை கூறுகிறது.
ஒரு உணவுக்கடை உரிமையாளருக்கும், ரிக்ஷாகாரருக்கும் இடையேயான மோதலை போலீஸ் கண்டும் காணாமல் இருந்ததன் விளைவே கலவரத்திற்கு காரணம் என்று உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையை வெளியிட்ட சமூக ஆர்வலர் ஷப்னம் ஆஸ்மி கூறினார்.

மேலும் அந்த அறிக்கையில் கூறியிருப்பது:
மக்கள் கூட்டத்தை கலைப்பதற்கு பதிலாக போலீஸ் கலவரக்காரர்களுடன் இணைந்து முஸ்லிம்களை தாக்கியது. மக்கள் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்துவதற்கு பதிலாக கொலைச்செய்யும் நோக்கத்துடன் இடுப்புக்கு மேலே போலீஸ் துப்பாக்கியால் சுட்டது. தொடர்ந்து கல்வீசி தாக்கிய ஹிந்துக் கும்பல்களுடன் இணைந்து முஸ்லிம் பகுதிகளில் நுழைந்து தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது போலீஸ்.
தடியடி நடத்தி மக்கள் கூட்டத்தை கலைப்பதற்கு பதிலாக துப்பாக்கிச்சூடு நடத்தி 6 பேரை கொலைச் செய்த பிறகு போலீஸ் தடியடி நடத்தியுள்ளது. மொத்தம் 42 பேருக்கு குண்டு காயம் பட்டுள்ளது.
2008-ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் காயமடைந்த முஸ்லிம்கள் மருத்துவமனைக்கு சென்றபொழுது அங்கேயும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பயந்து இப்பொழுது காயமடைந்த முஸ்லிம்கள் மருத்துவமனைக்கும் செல்லவில்லை.
ஆட்கள் கொல்லப்பட்டது, காயமடைந்தது ஆகியவற்றிற்கான ஆரம்ப கட்ட அறிக்கை இதுவரை ஆவணம்(ஃபயல்) செய்யப்படவில்லை. 35 முஸ்லிம் வீடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. ஐந்து ஹிந்து வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும் ஒரு வீடு மட்டுமே முற்றிலும் சேதமடைந்துள்ளது. ஆனால் யாருக்கும் மஹராஷ்ட்ரா அரசு இழப்பீடு வழங்கவில்லை.போலீஸ் உரிய நேரத்தில் தலையிட்டிருந்தால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டிருக்காது. இரு சமுதாயத்தினர் இடையே கல்வீச்சு நடந்தபொழுது போலீஸ் முஸ்லிம்களை தாக்கும் நிலைப்பாட்டை கடைப்பிடித்தது. போலீஸ் கொலைச் செய்யவேண்டும் என்ற நோக்கத்துடனேயே துப்பாக்கிச்சூட்டை தேவையில்லாமல் நடத்தியுள்ளது.
காயமடைந்தவர்களை போலீஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை. காயமடைந்தார்கள் என்று அரசு கூறும் 159 போலீசாரில் 18 போலீசார் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம்களை சுட்டுக் கொலைச் செய்த போலீஸ் தான் கொள்ளையடிப்பதற்கும் துணைபோனது.
முஸ்லிம் பகுதிகளில் தீயணைப்பு படை வர அனுமதி வழங்கப்படவில்லை. முஸ்லிம்களுக்கும், ஹிந்துக்களுக்கும் எவ்வித உதவியும் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இவ்வாறு உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் வீடுகள் உள்ளிட்டவற்றை தகர்த்தது, தீக்கிரையாக்கியது, கொள்ளையடித்தது ஆகியவற்றின் வீடியோ காட்சிகள் ப்ரஸ் க்ளப்பில் நடந்த நிகழ்ச்சியில் காட்டப்பட்டது.
குற்றவாளிகள் அல்லாத கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்கப் போவதாக அரசு அறிவித்துள்ளது என்று ஷப்னம் ஹாஷ்மி தெரிவித்தார்.
முஸ்லிம் சமுதாயத்தையே குற்றவாளிகளாக அறிவித்திருக்கும் அரசு நிதியுதவியை யாருக்கும் வழங்காது என்று அவர் கூறினார். பேராசிரியர் ராம் புன்யானி(ஆல் இந்தியா செக்குலர் ஃபாரம்), பேராசிரியர் அபூர்வானந்த், வழக்கறிஞர் நிஹால் சிங் பி ராத்தோர், மனன் திரிவேதி, தேவ்தேசாய், தன்வி ஸோனி, ஆர்மா ஆகியோர் உண்மை கண்டறியும் குழுவின் இதர உறுப்பினர்கள் ஆவர்.

.thoothuonline thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக