puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 19 ஜனவரி, 2013

போயிங் நிறுவனத்தின் அனைத்து 787 ட்ரீம் லைனர் விமான ஆர்டர்களும் ரத்து!



on 19 January 2013.
787 ட்ரீம் லைனர் விமானங்களில் ஏற்பட்ட கோளாறால் உலகெங்கிலும் பாவனையில் இருந்த இவ்வகை விமானங்கள் தரையிறக்கப்பட்டதை அடுத்து, இதுவரை பெறப்பட்ட விமான ஆர்டர்கள் அனைத்தையும் நிறுத்தி வைத்திருப்பதாக அறிவித்துள்ளது போயிங் நிறுவனம்.

போயிங் 787 ட்ரீம் லைனர் விமானங்களுக்கு 2004-ம் ஆண்டில் இருந்தே ஆர்டர்கள் பெறப்பட்டன. இன்றைய தேதிவரை மொத்தம் 848 விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 49 விமானங்கனே டிலிவரி செய்யப்பட்டுள்ளன.


ஜப்பானில் சமீபத்தில் ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் 2 போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்களில் பாட்டரி மற்றும் மின்சாதனங்களில் கோளாறு தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, உலகெங்கும் இயங்கும் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்கள் இனைத்தும் தரையிறக்கப்பட்டு, பல்வேறு விமான தர கட்டுப்பாட்டு அதிகாரிகள் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இதனால் பல்வேறு நாடுகளிடமிருந்து ஆர்டர் பெறப்பட்ட ட்ரீம்லைனர் விமானங்களின் டெலிவரி ரத்து செய்யப்படுகிறது. “தற்போது அந்த விமானங்களில் நாங்களும் பேட்டரி மற்றும் மின்சாதனக் கோளாறுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

 

இவை அனைத்தும் சரி செய்யப்பட்டு, ஐக்கிய விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் அங்கீகாரம் கிடைத்த பிறகு, தற்போது நிலுவையில் உள்ள விமானங்கள் டெலிவரி செய்யப்படும்” என்று போயிங் விமானம் நேற்று அறிவித்துள்ளது.

News :Source
eutamilar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக